உடல்நிலை மோசமான நிலையில் முன்னாள் வீரர்! இங்கிலாந்து கேப்டனின் செயலால் குவியும் பாராட்டு
இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தீவிர சிகிச்சை பெற்று வரும் முன்னாள் வீரரின் பெயரிட்ட டி-சர்ட்டை அணிந்து வந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரகாம் தோர்பெ, உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில் தற்போதைய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியில் செய்த விடயம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதாவது தோர்பெயின் பெயரிட்ட, 564 எண் கொண்ட டி-சர்ட்டை அணிந்துக் கொண்டு ஸ்டோக்ஸ் மைதானத்திற்குள் நுழைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'தோர்பெயின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பது நாங்கள் அனைவரும் அறிவோம். நாங்கள் அவரை விரும்புகிறோம், மேலும் தோர்பெ எங்களுக்கு மேலானவர்.
Photo Credit: Twitter (@TheBarmyArmy)
நான் அவரது மனைவி அமண்டாவிடம் பேசினேன். அவர் மிகவும் நன்றியுள்ளவராகவும், மரியாதையுடையவராகவும் இருந்தார். அத்துடன் அவர் தனது குடும்பத்தை பாதுகாக்கிறார். இந்த கடினமான சூழலில் நாங்கள் தோர்பெ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம்' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: Twitter (@cricketcomau)
Photo Credit: Getty Images
இடக்கை துடுப்பாட்ட வீரரான தோர்பெ, இங்கிலாந்து அணிக்காக 1993-2005 காலகட்டத்தில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.