முதல் இன்னிங்ஸில் டக்அவுட்! 2வது இன்னிங்ஸில் 1 ரன்..படுமோசமாக சொதப்பிய கேப்டன் ஸ்டோக்ஸ்
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணி போராடி வருகிறது.
பெத்தேல் அபாரம்
சிட்னியில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
Pic: AP Photo/James Elsby
நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 119 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஜேக்கப் பெத்தேல் (Jacob Bethell) 142 ஓட்டங்களுடனும், போட்ஸ் ஓட்டங்கள் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
ஸ்டோக்ஸ் சொதப்பல்
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியபோது கிராவ்லே 1, ஜோ ரூட் 6, வில் ஜேக்ஸ் 0 என படுமோசமாக ஆட்டமிழந்தனர்.
முக்கிய கட்டத்தில் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் வெப்ஸ்டர் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ஸ்டோக்ஸ், இரண்டாவது இன்னிங்ஸிலும் 1 ரன்னில் வெளியேறியது இங்கிலாந்து ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன் அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
நடப்பு தொடரில் பென் ஸ்டோக்ஸ் 2 அரைசதங்களுடன் 184 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் 6 இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Two half-centuries but also six single-figure scores - we didn't see Ben Stokes at his brilliant best with the bat 😔#AUSvENG #Ashes pic.twitter.com/fPcXIU6oaS
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 7, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |