இந்திய அணியை சமாளிக்க இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்புகிறாரா நட்சத்திர வீரர் பென் ஸ்டோர்க்ஸ்? வெளியான முக்கிய தகவல்
இந்திய கிரிக்கெட் அணியை சமாளிக்க இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோர்க்ஸ் திரும்புவாரா என கேள்வியெழுந்துள்ள நிலையில் அது குறித்து இங்கிலாந்து பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் வருகிற 25-ஆம் திகதி லீட்சில் 3வது டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நிச்சயம் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இந்த தடுமாற்றத்தை சமாளிக்க பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்புகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட், ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புவது தொடர்பாக எந்த ஒரு அழுத்தத்தையும் நாங்கள் தர மாட்டோம். அவர் எப்போது தயாராக இருக்கிறாரோ அப்போது என்னிடம் வந்து அதனை தெரியப்படுத்துவார்.
அதுவரை அவரை நாங்கள் அணிக்கு திரும்பும் படி வற்புறுத்த மாட்டோம். ஏனெனில் தற்போது அவருடைய நலனும், அவரது குடும்பத்தின் நலம் தான் முக்கியம்.
அவர் நிச்சயம் மனவலிமை பெற்று மீண்டும் அணிக்கு திரும்பும் போது பலமாக வருவார். அப்போது நாங்கள் பென் ஸ்டோக்ஸ்ஸை இரு கை நீட்டி வரவேற்போம் என கூறியுள்ளார்.