கையில் மடக்கி கட்டும் Bending ஸ்மார்ட்போன்! 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அறிமுகம்
Bending ஸ்மார்ட்போன் Lenovo Tech World 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ஆவலைத் தூண்டியுள்ளது.
Foldable ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் சந்தையில் Foldable (மடிக்கக்கூடிய) ஸ்மார்போன்கள் தற்போது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. இதேபோல் Bending ஸ்மார்ட்போன் அறிவிப்பு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது.
மோட்டோரோலாவின் இந்த கான்செப்ட் பென்டிங் ஸ்மார்ட்போன் ஆனது, 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற Tech World நிகழ்வில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட Bending Wrist ஸ்மார்ட்போனின் சமீபத்திய prototype ஆகும்.
சுமார் 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த ஸ்மார்ட்போன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
மோட்டோரோலாவின் கூற்றுப்படி, Bending ஸ்மார்ட்போன் Full HD+ pOLED டிஸ்ப்ளே கொண்டது. இதனை தட்டையாக மாற்றினால், இது 6.9 inch பேனலாக நீளும் எனவும் மோட்டோரோலா தெரிவித்துள்ளது.
Self Standing positionயில் இந்த ஸ்மார்ட்போனை வைக்கலாம் என்பது இதன் சிறப்பு. இந்த positionயில் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவானது 4.6 inch அளவுடையதாக சுருக்கப்படும்.
மேலும், இது ஒரு Bending ஸ்மார்ட்போன் என்பதால் இதை மணிக்கட்டில் வாட்ச் போல் சுற்றிக் கொள்ளலாம்.
இது இன்னும் உற்பத்தி நிலைக்கு வரவில்லை. Foldable ஸ்மார்ட்போன் ஏற்கனவே சந்தைக்கு வந்தபோதிலும், Bending ஸ்மார்ட்போன் சந்தையில் வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |