இந்த ஒரேயொரு காயை சாப்பிட்டால் நடக்கும் ஏகப்பட்ட அற்புதங்கள்
வெள்ளை பூசணிக்காய் பல்வேறு நோய்களை குணமாக்கும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
வெள்ளை பூசணிக்காயால் நடக்கும் அற்புதங்கள்
பூசணியின் விதைகள் குடல் புழுக்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. தோல் நீக்காமல் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து இந்த விதைகளைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குடலில் உள்ள எல்லா வகையான புழுக்களும் அகன்றுவிடும்.
முடி நன்கு வளரவும், தலையில் பேன்கள் குடியேறாமல் இருக்கவும் பூசணியின் தோலையும், விதைகளையும் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி இறக்கி வைத்து தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தேய்க்கலாம்.
1 கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான். இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம். உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது.
பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடிபோலச் சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.