முட்டை ஓட்டை இனிமேல் தெரியாம கூட தூக்கி எறியாதிங்க! இந்த நன்மைகளை உங்களுக்கு வழங்குமாம்
பொதுவாக நம்மில் பலர் முட்டையை சாப்பிட்டு விட்டு அதன் ஓட்டை தூக்கி வீசி எறிவது வழக்கம்.
ஏனெனில் முட்டையின் வெளிப்புற உறையில் கால்சியம் கார்பனேட், புரதங்கள் மற்றும் பிற தாதுக்கள் உள்ளன.
ஒவ்வொரு முட்டை ஓட்டிலும் தோராயமாக 40 சதவீதம் கால்சியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிராமிலும் 381-401 மி.கி கால்சியம் உள்ளது. இது பல்வோறு நன்மைகளை உடலுக்கு தருகின்றது. தற்போது அவை எப்படி என்பதை இங்கே பார்ப்போம்.
நன்மைகள்
- முட்டை ஓடுகளில் காணப்படும் கால்சியம் கார்பனேட் அதிக அளவு எலும்புகளை உருவாக்கவும் பாதுகாப்பாகவும் உதவுகிறது.
- முட்டை ஓடுகளில் காணப்படும் கால்சியம் உள்ளடக்கம் நோயின் அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், எலும்புகளை வலுப்படுத்தவும் அவற்றின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
- தூள் வடிவில் முட்டை ஓடுகளை உட்கொள்ளும் போது, மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், சவ்வை அகற்ற வேண்டாம்.
முட்டை ஓட்டை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?
முட்டையை வேகவைத்து, முட்டை உரித்து விட்டு ஓட்டை உடைத்து, பின்னர் அதை உட்கொள்வதற்கு முன் பொடியாக அரைத்து சாப்பிடுவதாகும். இதை உணவுடன் உட்கொள்ளலாம் அல்லது சாறு அல்லது தண்ணீருடன் உட்கொள்ளலாம். உங்கள் உணவில் சேர்க்கும் முன் ஒரு நிபுணரை அணுகுவது நல்லது.
ஆபத்துகள்
- முட்டை ஓட்டின் பக்க விளைவுகளை பொறுத்த வரையில், முட்டை ஓடுகளை எப்போதும் சிறிய துண்டுகளாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் பெரிய துண்டுகள் தொண்டை மற்றும் உணவுக்குழாயை காயப்படுத்தலாம்.
- மேலும், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களால் முட்டை ஓடு மாசுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே உணவு நச்சுத்தன்மையைத் தவிர்க்க, சாப்பிடுவதற்கு முன் முட்டை ஓட்டை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.