இரவு தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
ஆப்பில் சாறில் இருந்து தயாரிக்கப்படுவது தான் ஆப்பிள் சீடர் வினிகர். இது பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது.
இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவை நீரிழிவு நோய், உடல் கொழுப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்த பயனுள்ளதாக அமைகிறது.
ஆப்பிள் வினிகரில் புற்றுநோயைத் தடுக்க உதவும் பண்புகள் நிறைந்துள்ளன மேலும், சில உணவு தயாரிப்புகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
சிலரும் இதனை அதிகாலையில் அருந்துவதுண்டு. இருப்பினும் இதை வெறும் வயிற்றில் குடிப்பதை விட, இரவு நேரத்தில் குடித்தால் அது பல நன்மைகளை வழங்கும். தற்போது ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. ஆகவே இது உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. இது தவிர, ஆப்பிள் சீடர் வினிகர் உணவுகளை நீண்ட காலம் பாழாகாமல் பாதுகாக்க உதவுகிறது.
- வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் உடலில் கொழுப்பு தேங்குவதை குறைக்கும், பசியை அடக்கும், செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் கொழுப்பு எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கும். ஆனால் எக்காரணம் கொண்டும் ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால் அது குமட்டலுக்கு வழிவகுப்பதுடன், பற்களின் எனாமலை அரித்துவிடும்.
- சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் நல்லது. இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் குடிப்பது அதிக நன்மை பயக்கும்.
- வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வை ஆப்பிள் சீடர் வினிகர் வழங்கும். ஏனெனில் ஆப்பிள் சீடர் வினிகர் பாக்டீரியாக்களை கொன்றுவிடும் மற்றும் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால் இரவு தூங்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடித்தால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
- இரவு தூங்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடித்தால், இரவு நேரத்தில் 7-8 மணிநேரம் நல்ல ஆழமான தூக்கத்தைப் பெறலாம்.
ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிப்பதற்கான சரியான வழி
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, வேண்டுமானால் சுவையைக் கூட்ட சிறிது எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடியுங்கள். வேண்டுமானால், இரவு நேரத்தில் சாதாரண தண்ணீருக்கு பதிலாக இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சில நாட்கள் குடித்து பாருங்கள். இதனால் சில நாட்களில் அதன் பலனை நன்கு காணலாம்.