உடலுக்கு வலு தரும் உளுத்தங் கஞ்சி
30 வருடம் முன்பு எடுத்துக் கொண்டால் பெரியவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உணவுகளை பார்த்து பார்த்து கொடுத்து வந்தார்கள். அதாவது, எந்த கிழமையில் என்ன உணவு கொடுக்க வேண்டும்? எந்த நேரத்தில் என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று ஆரோக்கியமாக தேடி கொடுத்தார்கள்.
ஆனால், தற்போதைய காலகட்டங்களில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுத்தாலும் அதை அவர்கள் காலநிலை மாற்றத்தால் துரித உணவுகளையே தேடி விரும்பி சாப்பிடுகிறார்கள். அதற்கு அடிமையாக இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே கிடைக்க வேண்டிய ஆரோக்கியம் இல்லாமல் போகிறது.
அந்த வகையில், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான உணவுகளை சரியான இடைவெளியில் தவறாமல் எடுக்க வேண்டும். அப்படியாக, குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சத்தான கஞ்சி வகைகளை பற்றி பார்ப்போம்.

உளுந்தங்கஞ்சி:
குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த உளுந்தங்கஞ்சியை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். வாரத்தில் இரு முறை நாம் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கிறது.
இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பொழுது குழந்தைகளுக்கும் பெரியவர்களும் மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. அதேபோல், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய சிரமங்களில் இருந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. சிறுநீர் தொடர்பான தொற்றுகள் விலகுகிறது.
உடல் எடை:
ஒரு சில குழந்தைகள் அல்லது ஒரு சிலர் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டும் உடல் எடை ஆத்திகரிப்பது இல்லை. அவர்கள் இந்த கஞ்சியை தினமும் எடுத்துக் கொள்கின்ற பொழுது ஆரோக்கியமான உடல் எடை அதிகரிக்கிறது. குறிப்பாக இதில் சேர்க்கப்படும் உளுந்து தோல் அகற்றப்பபடமால் இருக்கும் பட்சத்தில் எலும்புகளுக்கு வலு கிடைக்கிறது.

கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
உளுந்தங்கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள் பார்ப்போம். இந்த கஞ்சியை செய்வதற்கு 100 கிராம் கருப்பு உளுந்து, வெல்லம் அல்லது கருப்பட்டி அரிசி கால் கப், துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து உளுந்தை போட்டு சிவப்பு நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். அதே போல், அரிசியையும் தனியாக அதில் போட்டு பொரிந்து வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
இந்த இரண்டும் சூடு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு கரையும் வரை அதனை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அடுத்து நாம் பொடித்து வைத்துள்ள மாவு கெட்டி சேராமல் தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும். பிறகு, அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி கைவிடாமல் மிதமான தீயில் கொதிக்க விட்டு கிளற வேண்டும்.
பின்னர் அதில் நாம் உருக்கி வைத்துள்ள வெல்ல நீரையும் ஊற்றி நன்றாக கலந்து விடவும். பிறகு வாசனைக்காக ஏலக்காய் சிறிதளவு, உப்பு சிட்டிகை சேர்த்து இறக்க வேண்டும்.

முந்திரி திராட்சை:
இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணமாக அதன் சுவையை இன்னும் அதிகரிக்க நெய்யில் துருவிய தேங்காய், முந்திரி திராட்சை உள்ளிட்டவைகளை சேர்த்து வறுத்து எடுத்து காஞ்சியில் சேர்த்துக் கிளறினால் நல்ல சுவையான உளுந்தங்கஞ்சி தயார்.