தினம் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் என்ன நடக்கும் தெரியுமா?
ஏலக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
தினமும் நாம் ஒரு ஏலக்காய் பயன்படுத்தும் பொழுது அது நம்முடைய உடலில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது.
தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் நடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் நல்ல பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட அவஸ்தைப்படுபவர்களும் சளியால் இருமல் வந்து தொடர்ந்து இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே தொடர் இருமல் குறையும்.
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை தினமும் வாயில் போட்டு மெல்ல வேண்டும்.
சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் அடிக்கடி ஏற்படும் வாந்தி நிற்கும்.
ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி போன்றவை தீரும்.