கருஞ்சீரகம் ஊறவைத்த தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
கருஞ்சீரக விதைகள் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன.
கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருக்கிறது.
இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
காலையில் வெறும் வயிற்றில் கருஞ்சீரகம் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகள் நம் உடலுக்கு வந்தடையும்.
தயாரிக்கும் முறை
- இரவு தூங்கும் முன், ஒரு டம்ளர் நீரில் 8-10 கருஞ்சீரக விதைகளை தட்டிப் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
- மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
கிடைக்கும் நன்மைகள்
கருஞ்சீரக விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களால் உடலில் உள்ள செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் கருஞ்சீரக தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
கருஞ்சீரக நீரைக் குடித்து வருவது இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுவதோடு, உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Shutterstock
கருஞ்சீரக நீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
கருஞ்சீரக நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அடிக்கடி குடிக்கும் போது, அது உடலைத் தாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சித் தடுத்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும்.
கருஞ்சீரகம் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |