பாலில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பாலுடன், சர்க்கரை சேர்த்து குடித்து வருகிறோம். காபி, டீ உடலுக்கு நல்லதா என்கிற குழப்பமே தீர்ந்தபாடில்லை. அப்படி பால் கொடுக்கும் போது சர்க்கரை சேர்க்காமல் அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்து கொடுத்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
பாலில் அதிக அளவிலான கால்சியம் நிறைந்து காணப்படுகின்றன. இது எலும்புகளை அதிகமாக வலிமையாக்குவவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். பாலில் வெல்லம் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்..
நன்மைகள்:-
பாலில் வெல்லத்தை சேர்த்து குடிப்பதன் மூலம் சரும பிரச்சனையை சரி செய்து அழகான மற்றும் பொலிவான சருமத்தை பெற்று விடலாம். இரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவி செய்யும்.
பாக்டீரியாக்கள் நமது உடலை பாதிப்பதையும் அஜீரண கோளாறால் ஏற்படும் மலச்சிக்கல், குடலியக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய பாலுடன் வெல்லத்தை கலந்து தினமும் குடியுங்கள்.
வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய பாலுடன் வெல்லத்தை கலந்து குடித்தால் சிறப்பான பலன் கிடைத்து விடும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரத்தசோகையை சரி செய்ய இது உதவி செய்யும்.