உணவில் அதிகளவு பெருஞ்சீரகத்தை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
பெருஞ்சீரகம் ஒரு வாசனை மற்றும் மூலிகை பொருளாகும். பெருஞ்சீரகம் “சோம்பு” என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. பொதுவாக நம் நாட்டு சமையலில் அதிகளவு பெருஞ்சீரகம் (Fennel Seeds) பயன்படுத்துவார்கள்.
பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் உணவில் வாசனையை அதிகரிக்க பெரிதும் பயன்படுகின்றது. வைட்டமின் கே, வைட்டமின் ஈ, மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கண்டுள்ளன.
மேலும் வைட்டமின் சி யும் அதிகளவில் காணப்படுகிறது. விட்டமின் சி ஒரு ஆன்டி ஆக்ஸிடன்டாகவும் செயல்படுகிறது.
இதனை தினமும் அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு நல்ல பயனை தருகின்றது.
அந்தவகையில் பெருஞ்சீரகத்தை உணவில் சேர்த்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- சுவாச பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த சமையலறை மருந்தாக சோம்பு விளங்குகிறது. சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
- பெருஞ்சீரகத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டு வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெந்நீர் பருகி வந்தால், இந்த ஜலதோஷம் பிரச்சனை உடனே சரியாகும்.
- சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் அதிகளவு பெருஞ்சீரகத்தை சேர்த்துக்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபாட்டுக்குள் வைக்க முடியும்.
- பெருஞ்சீரகத்தை சிறிதளவு நீரில் போட்டு அதை நன்கு காய்ச்சி, சற்று இதமான சூட்டில் அந்நீரை வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள் பருகினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருப்பவர்கள் ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டு முடித்த பின்பும் சிறிது பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். பற்களில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்
மலட்டுத்தன்மை பிரச்சனை ஆண் ,பெண் இருவருக்குமே அதிகம் இருக்கிறது. இப்பிரச்சனை உள்ளவர்கள் மற்ற மருந்துகளை சாப்பிடும் போது, சிறிதளவு பெருஞ்சீரகங்களையும் சேர்த்து சாப்பிட்டு வருவதால் விரைவிலேயே மலட்டுத்தன்மை நீங்கி, குழந்தை பெற்றெடுக்கும் திறனை கிடைக்கும். - பெருஞ்சீரகத்தில் மெக்னீசியம் சத்து அதிகம் நிரம்பி உள்ளது. இது நரம்புகளை வலுவாக்கி, ஆழ்ந்த தூக்கம் ஏற்பட செய்கிறது. ஒரு சிலருக்கு இருக்கும் தூக்கத்தில் நடக்கும் வியாதியையும் பெருஞ்சீரகம் குணப்படுத்துகிறது.
- பெருஞ்சீரகத்தை நீர்கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள், அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டதாக பெருஞ்சீரகம் இருக்கிறது.
- ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை நன்கு மென்று சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும். அதில் இருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி கல்லீரல், கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் புற்று ஏற்படுவதையும் தடுக்கும்.