தினமும் 5 வால்நட் சாப்பிடுவதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
முற்காலத்தில் ரோமர்களும், கிரேக்கர்களும், பிரெஞ்சு மக்களும் அதிக அளவில் அக்ரூட் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளது.
இதன் முழுமையான பகுதியை ‘அக்ரூட்’ என்றும், உடைந்த பகுதியை ‘வால்நட்’ என்றும் அழைப்பார்கள். வால்நட் மரத்தின் பட்டை, இலை, கனி போன்றவை அதிக மருத்துவப் பயன் கொண்டது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் அதிக அளவில் இதிலுள்ளது.
வால்நட்டில் புரதம், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகமுள்ளது.
அந்தவகையில் வால்நட் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- வால்நட்டில் உள்ள புரதச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து மூளையின் ஆற்றலை நன்றாக செயல்படுத்துகிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இந்த வால்நட்ஸை தினமும் 5 கொடுப்பதன் மூலம் மூளையின் ஆற்றலை அதிகரிக்கலாம்.
- தினமும் 5 வால்நட்ஸை பெண்கள் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய் வராமல் பாதுகாப்பதில் இந்த அக்ரூட் பருப்பு சிறந்து விளங்குகிறது.
- வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவே புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், தினமும் 5 வால்நட்ஸை தவறாமல் சாப்பிடுங்கள்.
- வால்நட்ஸை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதனால் நம் உடலில் எந்த ஒரு நோய் தொற்றுகளும் அவ்வளவு எளிதாக தாக்கிவிட முடியாது.
- தூக்கமின்மை பிரச்சனையால் அதிகம் அவஸ்த்தைபடுவார்கள் தினமும் சாப்பிட்ட பிறகு வால்நட்ஸை சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.
- தினமும் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் உடல் வறட்சியினால் ஏற்படும் தோல் சுருக்கம் பிரச்சனை சரியாகும்.
- செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வருவதினால் செரிமான பிரச்சனை சரியாகும். மேலும் வயிற்றில் சுரக்கும் அமிலங்களையும் சீராக்கும்.
- சிலருக்கு நரம்பு பிரச்சனைகள் இருக்கும், அவர்களுக்கு அடிக்கடி வலிப்பு பிரச்சனையும் ஏற்படும் அப்படி பட்டவர்கள் தினமும் வால்நட்ஸை சாப்பிடுவதன் மூலம் வலிப்பு நோய் குணமாகும்.
- பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் இந்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதன் மூலம் பித்தப்பை கற்கள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும்.
- தினமும் 5 வால்நட்ஸை ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வாருங்கள். இவற்றில் உள்ள பாலின் அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் வைத்து கொள்ளும். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
- வால்நட்ஸை தினமும் சாப்பிட்டால், அதில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7, தலைமுடியின் வலிமையை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைக் குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.