வெயில் கால கூந்தல் பராமரிப்புக்கு உதவும் கற்றாழை!
சோற்றுக் கற்றாழை, சிறுகத்தாளை, குமாரி, கன்னி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கற்றாழையானது நமக்கு இயற்கையாகவே முடி வளர்ச்சியை சீர்ப்படுத்த உதவுகிறது.
முடி வளர்ச்சியை தூண்டும் கற்றாழை!
கற்றாழையில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள் எனப்படும் சிறப்பு நொதியம் காரணமாக கற்றாழை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இந்த நொதியங்கள் மயிர்க்கால்களை அடைக்கக்கூடிய உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை திறம்பட உடைக்கிறது.
மயிர்க்கால்களில் அதிகப்படியான சருமம், அழுக்கு அல்லது இறந்த சருமம் இருந்தால், அவை சரியாக வளர ஊக்குவிக்கிறது.
இது கூந்தலை ஈரப்பதத்தோடு வைப்பது மட்டுமல்லாது தலையில் ஏற்படும் பூஞ்சைகளில் இருந்தும் தொற்றுக்கிருமிகளிலிருந்தும் காக்கின்றது.
கற்றாழை முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது.
தலைமுடி பராமரிப்பில் முடிகளை கறுப்பாக்கவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது.
தலையில் ஏற்படும் பேன் மற்றும் பொடுகு பிரச்சனைகளையும் கற்றாழை நீக்குகிறது.
கற்றாழையிள்ள சத்துக்கள்
கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கற்றாழையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்க பயன்படுகிறது.
கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உள்ளன.
இந்த மூன்று வைட்டமின்களும் செல் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
ஆரோக்கியமான செல் வளர்ச்சி மற்றும் பளபளப்பான முடி வளர்ச்சிக்கான ஊக்குவிப்பை இவை வழங்குகின்றன.
வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் கற்றாழை ஜெல்லில் உள்ளது. இந்த இரண்டு கூறுகளும் உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கும்.