தினமும் தயிருடன் இந்த காயை சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
வெயில் காலத்தின் போது நம் உடலில் இருக்கும் உஷ்ணத்தை தணித்து குளிர்ச்சி பெற தயிர் நெல்லிக்காயை சாப்பிடலாம். இது பல நோய்களுக்கு தீர்வாகவும் உள்ளது.
அதுபோல வெயில் காலத்தின் போது நமது உடலில் உஷ்ணங்கள் அதிகரித்து முகத்தில் பருக்களும், முகம் கருப்படைந்தும் காணப்படும்.அதனை தவிர்க்கும் வகையில் குளிர்ச்சி தர கூடிய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட கூடிய தயிர் நெல்லிக்காயை எப்படி செய்வது குறித்து விரிவாக பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:-
எண்ணெய்
கடுகு
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
பெரிய நெல்லிக்காய்
தயிர்
உப்பு
செய்முறை:-
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் கடுகு, பெருங்காயம் போடவும். பின்னர் நெல்லிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும்.
நெல்லிக்காய் முக்கால் பதம் வெந்ததும் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி விடவும்.
சிறிது நேரம் கழித்து ஆறியதும் அதில் தயிர் சேர்த்து பரிமாறலாம். இப்போது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தயிர் நெல்லிக்காய் தயார்.