உதடுகளை மென்மையாகவும், வசீகரமாகவும் மாற்ற இந்த ஒரு பொருள் போதும்
பெண்கள் எப்பொழுதும் தங்கள் உதடுகள் வெடிப்பு இல்லாமல் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
அந்தவகையில், உதடுகளின் வெடிப்புகளை இற்கையான முறையில் மென்மையாக மாற்ற நெய் ஒன்று போதும்.
இரவும் தூங்கும் முன் நெய்யை உங்கள் உதட்டில் தடவிக்கொண்டு தூங்கவேண்டும்.
கிடைக்கும் நன்மைகள்
உதடுகளுக்கு நெய்யை தொடர்ந்து பூசுவது, ஆழ்ந்த ஊட்டச்சத்தை அளிக்கும்.
மேலும், உதட்டில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, ஈரப்பதத்தைப் பிடித்து வறட்சியைத் தடுத்து உதடுகளை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்கிறது.
நெய் உதடுகளுக்கு பளபளப்பைக் கொடுத்து, அவற்றை முழுமையாகவும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்கச் செய்யும்.
உதடுகளில் நெய் பூசுவது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சேதமடைந்த செல்களை சரிசெய்யவும் புதுப்பிக்கவும் உதவும்.
உதட்டில் நெய்யை தொடர்ந்து பயன்படுத்துவது, உதடுகளின் கருமையைக் குறைத்து, ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான தோற்றத்தை அளிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |