வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழம் என்ன தெரியுமா? கொட்டி கிடக்கும் நன்மைகள்
கொடைக்கானலில், அதிக அளவு காய்க்க கூடிய அவக்கோடா பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் வெளிநாட்டினர் இந்த பழத்தை போட்டி போட்டு வாங்கி உண்கின்றனர்.
தற்போது கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் நாம் நம்மை பாதுகாத்து கொள்ள செய்ய வேண்டியது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவினை எடுத்து கொள்வது தான்.
அந்த வகையில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க கூடிய பழங்களில் ஒன்று அவக்கோடா. மேலும் இந்த பழத்தில் உள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
- இந்த பழத்தில் நல்ல கொழுப்பு சத்து உள்ளது. இதுமட்டுமின்றி அவக்கோடா பழத்தை சாப்பிடுவதால் சருமத்திற்கும் நன்மை தருகிறது. தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் வெளிநாடுகளில் வசிப்போர் இந்த பழங்களை அதிகளவில் வாங்கி சாப்பிட ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.
- வெளிநாட்டினர் அவக்கோடா பழத்தில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் தினசரி ஒரு வேளை உணவாகவே இந்த பழங்களை சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுபோல உடலில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்துகின்றது.
-
இந்த பழம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைகளை விரட்ட உதவுகின்றது. இதனால் நமக்கு உடல்நலம் மற்றும் உடற்பருமன் ஏற்படுவதை தடுக்கின்றது. இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்த பிரச்னையில் உடனடி நிவாரணம் பெறலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.