சமைக்கும் முன் காளான்களை வெயிலில் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கடையில் இருந்து வாங்கிவரும் காளான்களில் குறைந்த அளவில் காணப்படும் ஒரு சத்துப்பொருள், அவற்றை வெயிலில் வைக்கும்போது அதிகரிக்கும் என்ற விடயம் உங்களுக்குத் தெரியுமா?
காளான்களில் வைட்டமின் D
கடையில் இருந்து வாங்கிவரும் காளான்களில் எப்போதுமே குறைவான அளவில்தான் வைட்டமின் D இருக்கும். ஆகவே, சமைக்கும் முன் அவற்றை வெயிலில் வைப்பது பெரும் நன்மையைக் கொடுக்கும்.
சூரிய ஒளியில் வைட்டமின் D உள்ளது என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
ஆக, இந்த காளான்களை சமைக்கும் முன் வெயிலில் வைத்தால் அதிலுள்ள வைட்டமின் D, 10 மடங்கு அதிகரிக்குமாம்.
வைட்டமின் Dயின் பலன்கள்
இந்த வைட்டமின் D கால்சியம் என்ற சத்துப்பொருளை உடல் உட்கிரகிப்பதற்கு அல்லது ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் அவசியம். அத்துடன், தசைகள் செயல்படவும் வைட்டமின் D அவசியமாகும்.
இன்னொரு விதத்தில் கூறினால், போதுமான அளவில் வைட்டமின் D எடுத்துக்கொள்வது, இதயப் பிரச்சினைகள், சிலவகை புற்றுநோய்கள், சில சுவாசப்பாதை தொற்றுக்கள், கல்லீரல் பிரச்சினைகள், சிலவகை நீரிழிவு பிரச்சினைகள் மற்றும் சில வயிற்று உபாதைகள் வராமல் தடுக்க உதவுமாம்.
ஆக, அடுத்த முறை காளான் சமைக்க முடிவு செய்தீர்களானால், காளானை சிறிது நேரம் வெயில் வைத்தபிறகு சமைத்தால், கூடுதல் வைட்டமின் D கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
image - harvard