வெற்றிலை எதற்கெல்லாம் மருந்தாகிறது தெரியுமா?
தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன.
வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப்பலன்களைத் தரக்கூடியவை. கொடி வகையைச் சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது.
இதில், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளன. வீரியம் மிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பினைல்புரோபின் (Phenylpropene) பொருள் உள்ளது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.
அந்தவகையில் வெற்றிலை என்னெ்ன மாதிரியான நோய்களை குணமாக்குகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.
- கொதிப்புகள், புண்கள், காயங்கள், மூக்கின் புண்களை குணப்படுத்த வெற்றிலை வெளிப்புறமாக பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை சாற்றை பிழிந்து காயத்தின் மேல் தடவி, அதன் மேல் புதிதாக பறிக்கப்பட்ட வெற்றிலை வைத்து மூடி வைக்கவும். காயம் மிக வேகமாக குணமாகும்.
- கொப்புளங்கள் இருக்கும் போது வெற்றிலையை சூடாக்கி அதன் மேல் விளக்கெண்ணெய் தடவி எண்ணெய் தடவிய இலையை பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். ஒவ்வொரு சில மணி நேரத்திலும் இந்த இலையை மாற்றி எடுக்கவும். இது கொப்புளங்களை வெளியேற்ற உதவும்.
- காயங்களை குணப்படுத்த சில வெற்றிலைகளைன் சாறை எடுத்து காயத்தின் மீது தடவி விடவும். அதன் மேல் வெற்றிலை இலையை மடக்கி கட்டவும். 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் காயம் விரைவில் ஆறும்.
- கண்களில் காயம், தொற்று, பார்வைத்திறன் குறைபாடு இருந்தால் வெற்றிலை இலையின் சாற்றை தேனுடன் சேர்த்து அஞ்சனாக பயன்படுத்தப்படுகிறது. அல்லது கண் சொட்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- சிவந்த கண்கள் மற்றும் கண்களில் அரிப்பு பிரச்சனை இருந்தால் 5 முதல் 6 வெற்றிலை இலைகளை 1 கப் தண்ணீரில் வைத்து கொதிக்க விட்டு குளிர்விக்கவும். இந்த நீரை கண்கள் கழுவ பயன்படுத்துங்கள். இது கண் சிவப்பை தடுக்கும். அரிப்பை வெளியேற்றும்.
- தலைவலிக்கு வெற்றிலை சாறை பற்று போடுவதன் மூலம் தற்காலிக வலி நிவாரணியாக செயல்படுகிறது.
- மூட்டுகள் மற்றும் மூட்டுவலி வீக்கத்துக்கு மென்மையான வெற்றிலைகளை பேஸ்ட் ஆக்கி பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி விடவும்.
- சுவாசக்கோளாறுகளில் சளி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றை எதிர்கொண்டால் வெற்றிலை இலைகளை கடுகு எண்ணெயில் ஊறவைத்து சூடேற்றி மார்பு பகுதியில் தடவி விடவும். இதனால் அடர்த்தியான சளியும் கரைந்து வெளியேறும். இருமல் கட்டுப்படும்.
- தொண்டை கரகரப்பு, தொண்டையில் எரிச்சல், தொண்டைபுண்ணுக்கு வெதுவெதுப்பான நீரில் வேப்பிலையை நறுக்கி சேர்த்து சில நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி வாய் கொப்புளித்து (தொண்டை வரை படர செய்து) வந்தால் நிவாரணம் கிடைக்கும். தினமும் காலை மற்றும் மாலை வேளையில் இதை செய்து வரலாம்.
- கீழ் முதுகு வலி பிரச்சனை இருந்தால் வெற்றிலை இலைகளை சூடாக்கி எண்ணெயுடன் கலந்து இதை வை இருக்கும் அடி முதுகு இடுப்பு பகுதியில் தடவி எடுக்கவும்.
- வெற்றிலை சாறு அல்லது அதன் எண்ணெயில் சில துளிகள் தேங்காயெண்ணெயில் கலந்து காதில் விடுவதன் மூலம் காதுவலியை விரைவாக அகற்றிவிட முடியும்.
-
ஈறுகளில் இரத்தப்போக்கு இருந்தால் வெற்றிலை ஊறவைத்த நீரை கொண்டு வாய்க்கொப்புளித்து வந்தாலும் இரத்தபோக்கு மட்டுப்படும்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.