சாதாரண நாட்டு சக்கரையில் இத்தனை நன்மைகளா? இதுநாள் வரை தெரியாமல் போச்சே!
பொதுவாக பிரவுன் ரைஸ், பிரவுன் ரொட்டி, பிரவுன் சுகர் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுவார்கள். வெள்ளைச் சர்க்கரை சாப்பிடும்போது தேவைக்கு அதிகமான கலோரி உடலுக்கு கிடைக்கிறது.
இதனால் தேவையற்ற உடல் உபாதைகளுக்கு உள்ளாகவேண்டியிருப்பதால் வெள்ளைச் சர்க்கரையை முழுவதுமாக தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரையை சாப்பிடலாம். மேலும் நாட்டு சர்க்கையில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
நன்மைகள்:-
பிரவுன் சுகரில் ஆன்டி அலர்ஜிக் கூறுகள் அதிகளவில் இருப்பதால் ஆஸ்துமா நோயாளிகளின் சிகிச்சைக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் ஆஸ்துமா தீவிரத்தில் இருந்து குறைந்து இயல்பான சுவாச நிலையை அடைவதற்கு பயன்படுகிறது.
உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் என்றால் இனிப்புக்கு கட்டாயம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அறவே வெள்ளை சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்கு பதில் பிரவுன் சர்க்கரையை சாப்பிடலாம். இதில் கலோரியின் அளவு மிக குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க ஈசியாக இருக்கும்.
தசை பிடிப்புகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எந்த நேரத்தில் தசைப் பிடிப்புகள் ஏற்படும் என்று யாராலும் யூகிக்க முடியாது. இதில் இருந்து விடுபட பிரவுன் சுகரை எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் பொட்டாசியம் கால் மற்றும் கைகளில் உள்ள தசைகளில் ஏற்படும் பிடிப்புகளை சரி செய்யும்.