முட்டைகோஸ் வேகவைத்த நீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
weight loss
dental problem
ulcer
Joint Pain
By Kishanthini
“முட்டைகோஸ்” இது முழுவதும் இலைகளால் ஆன ஒரு காய் வகையாகும்.
முட்டைகோஸில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ஸ் மற்றும் வைட்டமின்களான ஏ, சி, கே போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
முட்டைகோஸை பச்சையாக சாப்பிடும் போது அதனுடைய சத்து அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்பதால் அதிகமாக வேக வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடாமல் அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். அதிலும் முட்டைகோஸ் வேகவைத்த நீரை குடிப்பதனால் இன்னும் பல நன்மைகளை வழங்குகின்றது.
அந்தவகையில் முட்டைகோஸ் வேகவைத்த நீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- வயிற்று அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டை கோஸ் வேகவைத்த நீரை தினமும் குடித்து வந்தால் அல்சர் வேகமாக பறந்து போகும்.
- சருமம் பொலிவில்லாமல் இருப்பவர்கள் தினமும் முட்டை கோஸ் நீரை குடித்தால் சருமம் பொலிவாக இருக்கும். மேலும் கரும்புள்ளி, முகப்பருக்கள் மறையும்.
- முட்டை கோஸ் நீரில் கூந்தலுக்கு தேவையான புரதம் மற்றும் கோலாஜன் இருக்கிறது. இதனை குடித்து வந்தால் கூந்தலுக்கு இயற்கையாக போஷாக்கு கிடைக்கும். இதனால் அடர்த்தியாக கூந்தல் பெறுவீர்கள்.
- பல்வலி, பல் வீக்கம், பல் சொத்தை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த நீரை வாயில் அரை நிமிடம் வரை வைத்து பின் குடிக்கவும். இதனை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- முட்டை கோஸ் நீரில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸென்டென்டுகள் இருப்பதால் இவை இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்கிறது. உடல் பருமனை குறைக்கிறது. உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை கரைகிறது.
- முட்டை கோஸ் வேகவைத்த நீரில் விட்டமின் கே அதிக அளவு இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எலும்பு தேய்மனம், மூட்டுவலி வராமல் தடுக்கும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US