இனி சுண்டல் ஊறவைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடாதீர்கள்! பல நோய்களுக்கு ஒரே தீர்வு
Beauty
Weight loss
Health tips
Channa water
By Logeswari
நமது உடலின் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் நிறைந்த உணவுகள் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இதற்காக பலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொடிகளை வாங்கி குடிப்பது உண்டு.
ஆனால் ஆயிரம் கணக்கில் செலவு செய்து புரோட்டீனை பெறுவதை விட குறைந்த செலவில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எப்படி எடுத்துக்கொள்வது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க..
- கொண்டைக்கடலை என்னும் சுண்டலில் புரோட்டீன் மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் சுண்டல் ஊற வைத்த நீரை குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- சுண்டல் ஊற வைத்த நீரை தினமும் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் சுண்டல் ஊற வைத்த நீரைக் குடிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்கள் குடிப்பது நன்மை பயக்கும்.
- நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் சுண்டல் ஊற வைத்த நீரைக் குடியுங்கள். அவ்வாறு குடித்து வந்தால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி அடிக்கடி பசி ஏற்படும் உணர்வையும் குறைக்கும்.
- சுண்டல் ஊற வைத்த நீர் சருமத்தின் உட்புறத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இது பல சருமம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுத்து இயற்கை அழகை மேம்படுத்துகிறது.
-
சுண்டல் ஊற வைத்த நீர் மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்க உதவுகிறது மற்றும் வயிற்றை சுத்தம் செய்ய உதவி புரிகிறது. அதோடு இது வாய்வுத் தொல்லை மற்றும் அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US