ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் தேங்காய் பால்: என்னென்ன நன்மைகள்
தேங்காயை அரைத்து அதிலிருந்து பிரிக்கப்படும் பாலில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.
இதில் நிறைந்துள்ள துத்தநாகம், லாரிக் அமிலம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன.
மேலும் தேங்காய் பால்சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் பாலை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் பல அதிசய மாற்றங்களை காணலாம்.
கிடைக்கும் நன்மைகள்
தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராளின் அளவை குறைக்கிறது. மேலும் நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தேங்காய் பால் குடிப்பது நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதன் மூலம் அதிகப்படியான உணவு உட்கொள்ளை கட்டுப்படுத்துகிறது.எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தேங்காய் பால் சிறந்த பலன்களை கொடுக்கும்.
Iryna Pohrebna/Shutterstock
தேங்காய் பாலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன. இது இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
தேங்காய் பாலை வெறும் வயிற்றில் குடித்து வர வாய் மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்தலாம்.
Health shots
இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி அல்சர் பண்புகள் புண்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகின்றன.
தேங்காய் பாலில் உள்ள பண்புகள் மூளைக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இது நினைவாற்றலை மேம்படுத்த உதவும்.
தேங்காய் பாலில் உள்ள ஆன்டி செப்டிக் பண்புகள் உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன. பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளின் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
homelesscuisine/Shutterstock
தேங்காய்ப்பால் குடிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கலாம்.
தேங்காய் பாலில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதைத்தொடர்ந்து உணவில் சேர்த்து வர இரத்த சோகையையும் தடுக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |