பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்.., என்னென்ன தெரியுமா?
Benefits of Coconut Oil on Feet Before Bed- இரவு தூங்குவதற்கு முன் பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்.
தேங்காய் எண்ணெயில் ஈரப்பதமூட்டும் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தைப் பாதுகாக்கவும், பாதங்களை மென்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
தினமும் இரவு தூங்குவதற்கு முன் பாதங்களை நன்றாகக் கழுவி உலர்த்திக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து பாதங்கள் மற்றும் குதிகால்களில் தடவி 5 முதல் 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம்.
அந்தவகையில், இரவு தூங்கும் முன் பாதத்தில் தேங்காய் எண்ணெய் தடவினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
பாதங்களை மென்மையாக்கும்- தேங்காய் எண்ணெய் பாதங்களில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது. இதனால் குதிகால் வெடிப்பு மற்றும் வறண்ட சருமப் பிரச்சனைகள் குறையும்.
நகங்களை பராமரிக்கும்- கால் நகங்களில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது நகங்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். இதனால் நகங்கள் வறண்டு உடைவது குறையும்.
பாதங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்- தேங்காய் எண்ணெயைக் கொண்டு பாதங்களில் மசாஜ் செய்வது தசைகளை தளர்வடைய செய்து, பாதங்களில் ஏற்படும் சோர்வை குறைக்க உதவும்.

பாக்டீரியா மற்றும் பூஞ்சை பாதிப்புகள்- தேங்காய் எண்ணெயில் உள்ள சில கொழுப்பு அமிலங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
பாத துர்நாற்றத்தை குறைக்க உதவும்- தேங்காய் எண்ணெயில் உள்ள சில உட்பொருட்கள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவலாம். இதனால் பாதங்களில் ஏற்படும் துர்நாற்றம் குறைய வாய்ப்புள்ளது.
தூக்கத்திற்கு உதவும்- தூங்குவதற்கு முன் பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்வது உடலுக்கு ஓய்வளித்து மன அமைதியை ஏற்படுத்த உதவும்.
இரத்த ஓட்டத்திற்கு உதவும்- பாதங்களை மென்மையாக மசாஜ் செய்வது தற்காலிகமாக இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இதனால் பாதங்களில் ஏற்படும் சோர்வு குறையும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |