மது அளவுக்கு மீறினால் நஞ்சு! அதுவே.. அளவாக குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
மது அருந்துவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. ஆனால் அளவில் மட்டும் கவனமாக இருப்பது அவசியம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்கின்ற பழமொழி இதற்கு பொருந்தும்.
மதுவை அளவுக்கு மீறி குடிப்பதால் கல்லீரல், நுரையீரல் முழுவதும் வெந்து உயிருக்கே ஆபத்தாய் முடியவும் வாய்ப்புண்டு. எனவே மது மட்டுமே கதி என்று இருக்காமல் தினசரி அளவோடு எடுத்துக்கொள்ளலாம் என்று சில நிபுணர்கள் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர்.
வோட்கா உள்ளிட்ட ஆல்கஹாலை பரிந்துரைக்கப்பட்ட அளவு குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும். பெண்கள் 1 டிரிங்க் அளவு, ஆண்கள் 2 டிரிங்க் அளவு ஆல்கஹாலை நாளொன்றுக்கு எடுத்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
மிதமான அளவில் ஆல்கஹால் எடுத்து கொள்வதால் நீண்ட ஆயுளை பெறலாம். குறிப்பிட்ட அளவுக்கு ஆல்கஹாலை எடுத்து கொள்வதால் இறப்பு விகிதம் 25% ஆக குறைத்துள்ளதாம்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது கடும் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும் அதே நேரத்தில் மிதமான குடிப்பழக்கம் இதய செயலிழப்பு அபாயத்தை குறைக்கும்.
மிதமான குடிப்பழக்கம் உடலில் நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தும் என்பதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகளை பெரியளவில் குறைக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.