தினமும் பெருங்காய பால் குடிச்சு பாருங்க.. இந்த நன்மைகள் உங்களை வந்து சேரும்
பெருங்காயம் அதிக வாசனையுடன் இருக்கும் ஒரு மருந்து என்று சொல்லலாம். ஒரு வகை மரத்திலிருந்து பெறப்படும் பிசின் போன்ற பொருள் தான் பெருங்காயமாக நமக்குக் கிடைக்கிறது.
அதிலும் பாலில் பெருங்காயம் சேர்த்து குடிக்கும் பழக்கத்தை நம்முடைய முன்னோர்கள் காலங்காலமாக எடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.
இது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடங்கி, அஜீரணக் கோளாறு வரை நிறைய பிரச்சினைகளைத் தீர்க்கும் பண்பு கொண்டது. அதுமட்டுமின்றி இது பல நோய்களுக்கு கூட மருந்தாகுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
எப்படி தயாரிப்பது
ஒரு மண் பாத்திரத்தில் ஒரு கிராம் அளவுக்கு பெருங்காயத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து 72 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
இது தண்ணீரில் முழுமையாகக் கரைந்தவுடன், அதில் 200 மில்லி வெதுவெதுப்பான பாலை சேர்த்து கலந்தால் பெருங்காயப் பால் ரெடி.
இந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இரவில் குடிப்பதானால் இரவு உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும்.
நன்மைகள்
- தினமும் பாலில் 50 முதல் 70 மில்லி கிராம் அளவுக்கு பெருங்காயம் சேர்த்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் முற்றிலும் அழிந்து போகுமாம்.
- குடல் வறட்சியைப் போக்கி, அமிலத் தன்மையைக் குறைத்து பி.எச் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
- அஜீரணம், வாய்வுத் தொல்லை, வயிற்று வலி, வாந்தி, விக்கல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
- மலம் கட்டாமல் சிலருக்கு தண்ணீர் போல இருக்கும். அந்த பிரச்சினை இருப்பவர்கள் தினமும் இரவு இந்த பெருங்காயப் பாலை குடிக்கலாம்.
- மலச்சிக்கல், வயிறு மந்தம் மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது.
- மூல நோயைத் தீர்க்க பெருங்காயப் பால் உதவும்.
- கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க பெருங்காயப் பால் பயன்படுகிறது.