மழைக்காலத்தில் உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஒரே ஒரு ஜூஸ் போதும்: என்ன தெரியுமா?
தற்போது மழைக்காலம் என்பதால் நம் உடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க நம் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்ட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
அந்த வகையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கேரட் ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேரட் ஜூஸ் குடிப்பதால் இன்னும் பல நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
கேரட்டில் உள்ள அதிகளவு பொட்டாசியம் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது மற்றும் பார்வையை மேம்படுத்துகிறது.
ஆப்பிள் அல்லது ஆரஞ்சு போன்ற மற்ற பழ சாறுகளுடன் ஒப்பிடும்பொழுது கேரட் சாறில் குறைந்தளவு மட்டுமே சர்க்கரை உள்ளது.
கேரட் ஜுஸில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் வெள்ளை இரத்த அணுக்கள் உட்பட செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.
கேரட் ஜூஸில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதால் கேரட் ஜூஸை குடிப்பவர்களுக்கு குறிப்பிட்ட புற்றுநோய்கள் ஏற்படுவது குறைகிறது.
கேரட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்கள்-இணைக்கப்படாத ஆக்ஸிஜன் அணுக்கள் உடலில் இருப்பதைக் குறைக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |