தினமும் இளநீரில் இதை கலந்து குடித்து வந்தால் இத்தனை நன்மைகளா? பலரும் அறியாத தகவல்கள் இதோ!
இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது மட்டுமில்லாமல் அதில் ஏராளமான மருத்துவ நன்மைகளும் நிறைந்து காணப்படுகிறது. அதே போல தேனிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அந்தவகையில் இரண்டையும் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
இளநீர்
தேன்
செய்முறை:-
ஒரு டம்ளர் இளநீர் எடுத்து கொண்டு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் அதாவது வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
நன்மைகள்:-
- தேன் மற்றும் இளநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முதுமைத் தோற்றம் வராமல் தடுக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி, இரைப்பை அழற்சி, வயிற்று உப்புசம், அசிடிட்டி போன்றவை ஏற்படாமல் தடுப்பதோடு செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. அதுபோல இளநீரில் தேன் கலந்து குடித்து வந்தால் அது சிறுநீரக கற்களைத் தடுப்பதோடு அதை கரைத்து எளிதில் வெளியேற்றும்.
- இரத்த சர்க்கரை அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தால் இளநீருடன் தேன் கலந்து தினமும் குடித்து வாருங்கள். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரை நோயைத் தடுக்கும்.