இரவில் பாலில் நெய் கலந்து குடியுங்கள்: என்னென்ன நன்மைகள் வந்தடையும் தெரியுமா?
புரதம், கால்சியம்,வைட்டமின் பி , ரிபோ ஃபிளேவின், வைட்டமின் டி என எல்லாச் சத்துக்களும் பாலில் உள்ளன.
இதேபோல் நெய்யில் வைட்டமின்கள் கே, ஈ மற்றும் ஏ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதில் பியூட்ரிக் அமிலமும் உள்ளது.
இரவு தூங்குவதற்கு முன்பாக பாலில் நெய் கலந்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் நம் உடலுக்கு வந்தடையும்.
கிடைக்கும் நன்மைகள்
பாலில் நெய் கலந்து குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு உடலின் ஆற்றல் வலிமை அதிகரிக்கும்.
இது அதிகப்படியான வேலையைச் செய்யத் தேவையான ஸ்டாமினாவை உடலுக்கு வழங்குகிறது. இதனால் உடல் சோர்வானது தடுக்கப்படும்.
மூட்டு வலி உள்ளவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பாலில் நெய் கலந்து குடித்தால் மூட்டு வலி குணமாகும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் பாலில் நெய் கலந்து குடிப்பது செரிமான சாறுகளின் உற்பத்திக்கு உதவுகிறது.
மேலும் வயிற்று பொருமல், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கலாம்.
இது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் உங்களை ஆற்றலுடன் செயல்பட அனுமதிக்கிறது.
பால் மற்றும் நெய் கலவையானது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் பாலில் நெய் கலந்து குடித்து வந்தால் எலும்புகள் வலுப்பெறும். இது மூட்டு வலிக்கும் நல்ல நிவாரணம் கொடுக்கும்.
மேலும் தூக்கம் வராமல் சிரமப்படுபவர்களுக்கு நல்ல தூக்கம் வர இரவில் நெய் கலந்த பால் குடிக்கலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இரவில் பாலுடன் நெய் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
இது தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிகவும் நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |