காலையில் தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Health tips
Mosambi juice
Digestion problem
By Logeswari
நாம் எடுத்து கொள்ளும் உணவு முறையில் நமக்கே தெரியாமல் பல நன்மைகள் உள்ளது. அந்த வகையில் சாத்துக்குடியில் பல நன்மைகள் மறைந்துள்ளது. ஆனால் அது தெரியமலையே நாம் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருகிறோம்.
பழமாக சாப்பிடுவதை விட ஜூஸ் ஆக எடுத்து கொள்வது சிறந்தது. இது நீர்சத்து நிறைந்த ஒரு பழமாகும். இது அனைத்து பருவ நிலைகளிலும் எடுத்து கொள்ள முடியும். சரிவாங்க சாத்துக்குடியை ஜூஸ் தினமும் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கியங்கள் குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்:-
- கர்ப்ப காலத்தில் முதல் மாதத்தில் வரும் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவுகள் வரும். அந்த நேரத்தில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது குமட்டல், மற்றும் வாந்தி வருவதை குறைக்கும். வாரத்திற்கு 3 முறை இந்த சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. இதனால் சளி , இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வராமல் தடுக்கும்.
- இந்த ஜூஸ் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதோடு இதில் வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடென்ட்கள், தாதுக்கள் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் அளவுக்கு அதிகமாகவே இருக்கின்றது. இது உமிழ் நீரை சுரப்பிகளை தூண்டுவதால் வயிற்றில் பசியை உண்டாக்கும். செரிமான பிரச்சனை, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
- நீண்ட நாட்களாக இருக்கும் வயிறு புண்கள் மற்றும் வாய் புண்கள் இருப்பவர்கள் இதை எடுத்து கொள்ளலாம். இது வயிற்றில் இருக்கும் அமில சுரப்பை சமநிலை படுத்துகிறது. அதனால் வயிறு புண்கள் சரி ஆகும்.
-
சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆனால் வயதில் பெரியவர்கள் இதனுடன் சர்க்கரை சேர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US