ஓமம் நீர் குடிப்பதனால் இத்தனை அற்புத மருத்துவ பயன்கள் !!
cold fever
stomach ulcer
Indigestion
By Kishanthini
ஓமம் அனைத்து வீட்டு சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள். ஓமத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அதோடு ஓமத்தில் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது.
ஓமத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், நியாசின் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதிலும் இதன் நீரை தினமும் பருகினால் உடலுக்கு நல்ல அற்புத பலன்களை வழங்குகின்றது.
அந்தவகையில் ஓமம் நீர் குடிப்பதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமத்தின் நீரை பயன்படுத்தலாம். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் ஒரு சிறந்த மருந்தாகும்.
-
ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.
- வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஓமத் திரவம் நல்ல ஜீரண சக்தியை தரும்.ஜீரணத்திற்கு மட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் திரவம் அருமருந்து.
-
மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது.
- பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம்.
- வயிற்றில் இருக்கும் புண் ஆறுவதற்கும் ஓமம் மிகவும் உதவியாக இருக்கும்.
- வெறும் கடாயில் கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து வறுக்கவும். நன்கு பொரியும்வரை வறுக்கவும். மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும். பின்பு அதோடு அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அரை கப் தண்ணீர் கால் கப் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க விடுங்கள்.பெரியவர்கள் ஓமத் திரவத்தை அப்படியே அருந்தலாம், சின்ன குழந்தைகளுக்கு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அருந்த வைக்கலாம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US