தண்ணீர் அடிக்கடி குடிப்பதால் உடல் எடை குறையுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
உணவின்றி கூட சில நாட்கள் வாழ்ந்திடலாம். ஆனால் நீரின்றி வாழ முடியாது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்காவிட்டால் உடல் உறுப்புகளின் இயக்கமும் சீராக இருக்காது. உடலின் வெப்பநிலை முதல் செரிமானம் வரை எல்லாவற்றுக்குமே நீர் தேவைப்படுகிறது.
தினமும் கட்டாயமாக இரண்டு லிட்டர் தண்ணீராவது குடித்துவிட வேண்டும். சாப்பிட்ட பின் உண்டாகும் தாகத்தை போக்க தண்ணீர் குடிக்கலாம். அதுபோல உங்களுக்கு அடிக்கடி பசியுணர்வு ஏற்படும்போது தண்ணீர் குடிக்கலாம்.
இதனால் துரித உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது குறையும். இவ்வாறு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம் வாங்க..