நெய் + வெல்லம்; இதை இப்படி சாப்பிட்டால் அந்த பிரச்சினைகள் வராதாம்...! நோட் பண்ணுங்க
உடல் எடையை குறைத்துக் கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் உணவை அளவோடு எடுத்துக்கொள்வார்கள்.
அதுவே சுவையான உணவாகவும் தனக்கு பிடித்த உணவாகவும் இருந்தால் அதை அப்படியே விட்டு வைக்க முடியாமல் தீர்ந்து போகும் வரையில் சாப்பிடுவார்கள்.
என்ன தான் கட்டுக்குள் வைத்துக்கொண்டு அளவோடு சாப்பிட்டாலும், இந்த குளிர்காலத்தில் சூடாக ஏதாவது இருந்தால் எப்படியாவது சாப்பிட தான் தூண்டும்.
வயிறு முட்டுவதற்கு சாப்பிட்டவுடன், சாப்பிட்ட களைப்பு மற்றும் சோர்வு ஏற்படும். சிலருக்கு வயிறு மந்தமாகவும் இருக்கும்.
எனவே செரிமானத்திற்காக டீ அல்லது சூடான தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஆயுர்வேத சம்பந்தமான வைத்தியமே இதற்கு மருந்தாக இருக்கும்.
எனவே அதை வைத்து என்ன செய்யலாம் என இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
- வயிறு நிரம்ப சாப்பிட்ட பிறகு நெய்யுடன் வெல்லம் கலந்து, சாப்பிட்டு வர செரிமானம் மேம்படும்.
-
நெய் மற்றும் வெல்லம் எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.
-
குடல் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
-
வாதம், பித்தம், கபம் ஆகியவை சீராக இருப்பதற்கு இதை எடுத்துக்கொள்ளலாம்.
- வெல்லத்தில் இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளது. நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இதை எடுத்துக்கொள்வதால் உடலிற்கு அதிக சத்துகள் கிடைக்கும்.
-
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
- உடலில் இரத்த சர்க்கரை அளவை பெரிதாக அதிகரிப்பதில்லை.
- முடி மற்றும் நகங்களின் வளர்ச்சிக்கு உதவும்.
- இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும்
இதை மதிய நேரத்தில் மட்டும் சேர்த்துக்கொள்ளவும், ஏனெனில் இரவு நேரங்களில் எடுத்துக்கொள்ளும்போது இது செரிமான பிரச்சினையை சில வேளைகளில் ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : ஏதேனும் ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்கள் இதை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |