தினமும் வெறும் வயிற்றில் 10 கருவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கறிவேப்பிலையில், கார்போஹைட்ரேட்டுகள், பைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் அதிகளவில் உள்ளன.
மேலும் அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
கிடைக்கும் நன்மைகள்
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கறிவேப்பிலையை ஜூஸ் போட்டு குடித்துவந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.
செரிமான கோளாறு பிரச்சனை உள்ளவர்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து அதன் சாறை குடித்து வர குணமாகும்.
கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வர கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை தவிர்க்கலாம்.
Getty Image/ Shutterstock
ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
10 கறிவேப்பிலை இலைகளை தினமும் காலையில் தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையத் தொடங்கும்.
இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனையை பெற வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |