தினமும் 4 பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்க பெறுகின்றது.
பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன.
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது நரம்புகளை பலப்படுத்தும்.
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிடலாம்.
பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது! இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம்.
எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.
பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - பி 17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது.
மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது.