தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் என்ன பயன் தெரியுமா? கண்டிப்பா தெரிஞ்சிக்கனும்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையில்லை என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அது முற்றிலும் உண்மை. ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பல மடங்கு அதிகமாக உதவி செய்கிறது.
சிலர் ஆப்பிளின் தோலை சீவி வெறும் ஆப்பிளை மட்டும் சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிட்டால் பயன் எதுவும் இல்லை. ஆப்பிளை தோளோடு சாப்பிட்டால் மட்டுமே முழுமையான சத்தை பெற முடியும்.
குழந்தைகளுக்கு ஆப்பிளை வேகவைத்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். சரி வாங்க ஆப்பிளில் உள்ள மற்ற பலன்களை குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்:-
- ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால் இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.
- ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால் சருமம் இளமையுடன் வைத்து கொள்ள உதவுகின்றது. மேலும் தினமும் இதை சாப்பிட்டு வந்தால் அந்த ஆன்டிஆக்ஸிடன்ட் செல் அழிவைத் தடுத்து சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.
- ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைப்பதோடு ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.
-
ஆப்பிளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மூளையில் உள்ள டோபமைன் உருவாக்கும் மூளை செல்களை அழித்து உண்டாகும் மற்றும் பார்கின்சன் நோய் ஏற்படுவதை தடுக்கும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.