தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளடக்கி இருப்பதால் இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.
ஆப்பிளில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைய உதவியாக இருக்கின்றது. ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர்.
வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும் உணவு பொருள்களில் ஒன்று. ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். அது மட்டும் இல்லாமல் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.
மேலும், ஆப்பிளில் உள்ள பலரும் அறியாத நன்மைகள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..