இதயத்தை பாதுகாக்கும்: நண்டு சாப்பிடுவதன் நன்மைகள்
கடல் உணவுகளில் பலருக்கும் நண்டு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும். பலரும் நண்டுகளை அதனுடைய சுவைக்காக விரும்பி சாப்பிடுகிறார்.
ஆனால், நண்டு இறைச்சியில் நம் உடலுக்கு தேவையான அதிக அளவு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துகளான கொழுப்பற்ற புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன என்று புகழ் பெற்ற ஊட்டச்சத்து நிபுணரும் மூத்த மருத்துவர் உளவியல் நிபுணரும் சொல்கிறார்கள்.
இந்த நண்டில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக புரதம் இருப்பதால் நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பாகவும் நம்முடைய மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியாக, நண்டு சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இதயப் பாதுகாப்பு:
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்:
நண்டு இறைச்சியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதை நம்முடைய ரத்தத்தில் தேங்கி இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. மேலும், ரத்த நாளங்களில் ரத்தக் கட்டிகளை தடுக்கின்றன. ஆதலால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய அபாயத்தை குறைக்கிறது.
வைட்டமின் டி மற்றும் கால்சியம்:
இந்த நண்டு கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற முக்கிய கனிமங்கள் உள்ளது. அதனால் இவை நம்முடைய எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு வயதாகும்போது ஏற்படக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு பலவீனப் பிரச்சனைகளைத் தடுக்கின்றன.

நினைவாற்றல் மேம்பாடு:
இந்த நண்டு இறைச்சியில் வைட்டமின் பி12 மற்றும் செலினியம் நிறைந்திருக்கிறது. இதை நம்முடைய மூளை செல்களை தூண்டி நினைவாற்றலையும் நம்முடைய கவனத்தையும் அதிகரிக்கிறது. அதோடு நம்முடைய மனச் சோர்வு மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
நண்டுகளில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்குகின்றன. செலினியம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, நீண்ட நாட்கள் இருந்து வந்த நோய்களை தடுக்கும் வழியாக பாதுகாப்பு கவசமாக மாறுகிறது.
உடல் எடை குறைப்பு:
இந்த நண்டு உணவில் கொழுப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. மற்றும் அவை தூய்மையான கொழுப்பற்ற புரதத்தை வழங்குகின்றன. ஆதலால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசைகளை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த தீர்வாகவும் இருக்கிறது.

நண்டுகளை உண்ணும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
ஒரு சிலருக்கு கடல் உணவு அல்லது சிப்பி வகைகளால் ஒவ்வாமை உள்ளவர்கள் நண்டுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல், நண்டுகளை சமைக்கும் போது அவற்றை நன்றாக கழுவி வேக வைக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும் குறைவான உப்பு மட்டும் எண்ணை பயன்படுத்தி அவற்றை குழம்பு அல்லது சூப் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். மேலும், நண்டு சுவையான உணவாக மட்டுமல்லாமல் சமச்சீரான ஊட்டச்சத்துக்களை அழித்து நம்முடைய உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.