தயிர் சாதத்தில் இவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளதா? இதய நோயை கூட தடுக்குமாம்
எளிதாக தயாரிக்கக்கூடிய தயிர் சாதம் சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.
தயிர் சாதம் தரும் நன்மைகள்
தினமும் நம் உணவில் தயிர் சாதத்தை சேர்ப்பதன் மூலமாக நமக்கு ஏற்படும் அனைத்து வயிற்று பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். அஜீரணக் கோளாறை சரி செய்யும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்ற உணவு இந்த தயிர் சாதம். ஒரு சிலர் இது பாலில் இருந்து வருவதினால் இதிலும் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்று எண்ணி உணவுகளில் தவிர்ப்பார்கள், ஆனால் இதில் இருக்கும் அனைத்துமே நல்ல கொழுப்பு என்பதால் இது உங்கள் உடல் எடையை அதிகரிக்காது.
தயிர் சாதம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.
கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கும் நலம் பெயர்க்கும்