தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.., என்னென்ன தெரியுமா?
முட்டை புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு முழுமையான ஊட்டச்சத்து உணவாகும்.
முட்டை சாப்பிடுவது உடல் தசைகளை வலுப்படுத்தவும், கண் பார்வையை மேம்படுத்தவும், மூளை வளர்ச்சிக்கும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது.
ஒரு முட்டை சுமார் 6 கிராம் புரதத்தை வழங்குகிறது, இது உடலின் திசுக்களை சரிசெய்யவும் தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும், ஒரு பெரிய முட்டையில் சுமார் 70 கலோரிகள், 6 கிராம் புரதம் மற்றும் வைட்டமின்கள் A, D, B12, மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில், தொடர்ந்து 2 வாரம் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
மூளை ஆரோக்கியம்- முட்டையில் உள்ள கோலின் என்ற ஊட்டச்சத்து, நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவும் அசிடைல்கொலின் என்ற நரம்பியக்கடத்தி உருவாக உதவுகிறது.
நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்- முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற அச்சம் பலருக்கு உள்ளது. ஆனால், அளவோடு தினமும் முட்டை சாப்பிடுவது உடலில் நல்ல (HDL) கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகின்றனர்.

கண் ஆரோக்கியம்- முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாந்தின் ஆகிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களை நீல ஒளியின் பாதிப்பில் இருந்து பாதுகாத்து பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
சருமம், முடி, நகங்களுக்கு நன்மை- முட்டையில் உள்ள சல்பர் நிறைந்த அமினோ அமிலங்கள், கெரட்டின் உற்பத்தியை அதிகரித்து, சருமம், முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |