ஒரு நாளைக்கு 1 டம்ளர் இதனை குடித்தால் போதும்!
டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகும் பப்பாளி இலை!
பப்பாளி இலைகளை பொதுவாக சாறாகவோ,அல்லது தேநீரோடு கலந்தோ அருந்தலாம். மேலும் டெங்கு காய்ச்சலுடன் தொடர்புடைய அறிகுறிகளுக்கு இது சிகிச்சையளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பப்பாளி இலைகளை அருந்துவதால் ஏற்படும் பயன்களாக உடல் வீக்கம் குறைதல், இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு மேம்படுதல், தோல் மற்றும் முடி ஆரோக்கியம் சீராகல்,புற்றுநோய் தடுக்கப்படுதல் போன்றவையை கூறலாம்.
உடல் நோய்களுக்கு அருமருந்தாகும் பப்பாளி !
மேலும் பப்பாளி ஜூஸை தினமும் 1 கப் அருந்துவதால் மலச்சிக்கல்,அதீத உடற்பருமன் பிரச்சினை,நீரிழிவு நோய்,புற்றுநோய்,நரம்புத்தளர்ச்சி பிரச்சினைகளுக்கு தீர்வாக பப்பாளி ஜூஸ் செயற்படுகிறது. மேலும் பப்பாளி பழத்தோடு தேன் கலந்து உண்பது மிகவும் நனமை அளிக்கிறது எனக்கூறப்படுகிறது.
உடற்பருமன் பிரச்சினைகள் உள்ளவர்கள் தினமும் பப்பாளி ஜூஸ் ஒரு கப் அருந்தினாலே போதும் உங்கள் உடல் எடையை குறைப்பதில் பப்பாளி ஜூஸ் பெரும்பங்காற்றும்.
பப்பாளியிலுள்ள ஆரோக்கியமான கொழுப்புஅமிலங்கள் மற்றும் பொட்டாசியம் நம் உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.
பப்பாளி ஜூஸை அருந்துவதன் மூலம் அதிலுள்ள கரட்டினைட்ஸ் முகத்திலுள்ள சுருக்கங்களை மறைத்து முகம் பளபளக்க செய்கிறது. மேலும் அவை கண்களுக்குரிய சத்தினை வழங்குகிறது.
பப்பாளியிள்ள சத்துகள்!
பப்பாளியில் வைட்டமின் எ, வைட்டமின் சி,பொட்டாசியம், செம்பு, நார்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பீட்டா கரோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. உடல் எடையினை குறைக்க நார்ச்சத்தானது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது.