அன்னாசி பழம் சாப்பிட்டா தொப்பை குறையுமா? தெரிந்து கொள்வோம் வாங்க!
உடல் எடையை குறைப்பது தான் இன்றைக்கு பலரது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவாக இருக்க வேண்டும்.
நமக்கு தேவையான கலோரிகள் போக மீதமிருக்கும் கலோரிகள் கொழுப்பாக மாறிடுகின்றன. அந்த கலோரியை எரிக்க போதுமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக தொடர்ந்து இப்படி கலோரி சேரும் பட்சத்தில் அவை கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.
உடல் எடையை குறைக்க அன்னாசி பழத்தை நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். அன்னாசி பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டிஆக்ஸிடண்ட், மினரல்ஸ், விட்டமின்ஸ் ஆகியவை நிறைந்திருக்கிறது. மேலும் அன்னாசி பழத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..