உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையை கூட அதிகரிக்கலாம்
உருளைக்கிழங்கு பலருக்கும் பிடித்த உணவாகும். காய்கறிகளிலேயே அதிக சுவை கொண்ட உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு திகழ்கிறது.
இதை பல்வேறு விதமாக சமைத்து சாப்பிட முடியும். இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது.
உருளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கிறது.