பூண்டிலுள்ள நன்மைகள் தெரிந்தால், பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்!
உங்கள் நாளை சில பூண்டு பற்களுடன் தொடங்குவது நல்லது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
பூண்டு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
சமையலைப் பொருத்தவரை பூண்டு மிக முக்கியமான பொருளாகும்.
பூண்டில் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்ற பண்புகள் காணப்படுகிறது.
பூண்டினை எவ்வாறு உண்ணலாம்?
பூண்டு பற்களை பச்சையாக வெறும் ஒரு கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்க உதவுகிறது.
தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு பற்களை சாப்பிடுவது உங்க ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் உதவி செய்யும்.
இந்த பூண்டு பற்களை நீங்கள் தேனில் ஊற வைத்து கூட சாப்பிடலாம்.
தோலுரித்த பூண்டை 10 நாட்கள் தேனில் ஊற வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பூண்டை உட்கொண்ட பிறகு யாருக்காவது குமட்டல், வாயு, நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பூண்டு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பூண்டில் காணப்படும் பலன்கள்
பூண்டில் ஒவ்வாமை எதிர்ப்பு குணங்கள் பல காணப்படுகின்றன.
பூண்டை பச்சையாக உண்பதால் உடல் ஒவ்வாமைகளை எதிர்த்து போராட இது உதவும்.
டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகிய சத்துகள் பூண்டில் இருப்பதால் இதற்கு கீல்வாத எதிர்ப்பு குணங்களும் உள்ளது.
ஒவ்வாமை நாசியழற்சி போன்றவைகளை குணப்படுத்தவும் பூண்டு உதவுகிறது.
கொழுப்பை கரைப்பதில் பூண்டு மிகச் சிறந்த பங்காற்றுகிறது.
இந்த பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது நல்ல ஜீரண சக்தியை நீங்கள் பெற முடியும்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவுகிறது.
பூண்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
நீரிழிவு நோய், மன அழுத்தம் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களை அகற்றவும் இது உதவுகிறது.
இது சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.
இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.