கொழுப்பை குறைக்கும் முள் இல்லாத மீன்
பலருக்கும் மீன் சாப்பிடுவது பிடிக்கும் என்றாலும் அதில் இருக்கக்கூடிய முள் அவர்களுக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கிறது. அப்படியாக, நாம் இப்பொழுது விலை குறைவாகவும் அதே போல் முள் இல்லாத மீன் வகைகளை பற்றியும் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் squid அல்லது cuttlefish என்று அழைக்கப்படும் ஒருவகை சுவையான மீனின் பெயர் கணவாய் மீன். இந்த மீன்களில் முள் மற்றும் செதில்கள் இருக்காது. இது ஒரு வகையான கடல் மீனாகும். இது நம் உடலுக்கு தேவையான புரட்சத்து ஒமேகா- 3, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

WQNDTO8
இந்த மீன்களை நாம் அடையாளம் காண்பதும் எளிது. இவற்றின் கண்கள் பெரியதாகவும் பற்கள் ரம்பத்தினை போன்று காட்சியளிக்கும். முன்புறத்தில் எட்டு கரங்கள் இருக்கும். அதை போல், பிரஷ்ஷான கணவாய் மீனின் உடல் பொதுவாக வெள்ளை அல்லது இளஞ்சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும்.
தோல் பளபளப்பாகவும் சதை உறுதியாகவும் இருக்கும். இந்த மீன்களை சாப்பிடுவதால் நம் உடலுக்கு அதிகளவில் ஆரோக்கியம் கிடைக்கிறது. இந்த வகை மீன்களில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களில் மூளையின் செயல்பாட்டையும் நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது.
கொழுப்பை குறைக்கும்
அதை போல், இந்த சத்துக்களில் இருக்கக் கூடியவை நம் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து இதய நோய் வராமல் குறைக்கிறது. அதோடு கூடுதலாக, தசைகளின் வளர்ச்சிக்கும் திசுக்களை பழுது பார்ப்பதற்கும் தேவையான அத்தியாவசிய புரதச்சத்து இந்த கணவா மீன்களில் அதிகம் உள்ளது. இதைவிட முக்கியமாக கார்போஹைட்ரேட் மட்டும் கலோரிகள் மிகக் குறைவு என்பதால் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க இவை உதவியாக இருக்கிறது.
ரத்த சோகையை தடுக்கும்
மேலும், இந்த கணவா மீனில் உள்ள இரும்பு மற்றும் தாமிரம் சத்துக்கள் நம்முடைய சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகை வராமல் தடுக்கிறது. பொதுவாக, வாழ்வியல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் இறைச்சி வகைகளை சாப்பிடுவதற்கு அவர்கள் அஞ்சுவதுண்டு.

ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த மீன் ஒரு சிறந்த உணவாகும். காரணம் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் அயோடின் சத்து தைராயிடு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
நினைவாற்றல் அதிகரிக்கும்
அதனால், தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் இந்த மீன் எடுத்துக் கொள்வது மிக சிறப்பு. இந்த கணவா மீன் நம்முடைய மூளை செயல்பாட்டிற்கும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
கோலின் என்றும் அறிய ஊட்டச்சத்து இந்த மீனில் அதிகம் உள்ளது. ஆதலால், நம்முடைய நினைவாற்றல் அதிகரிக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இது மூளை டோபமைன் மகிழ்ச்சி ஹார்மோன்களை தூண்டி நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் மன அழுத்தத்திலிருந்தும் விடுவிக்கிறது.