பிரான்சுக்கு ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி
சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி முதலான நாடுகளில் வாழ்பவர்கள், பக்கத்து நாட்டில் பொருட்கள் குறைவான விலையில் கிடைக்கும்போது, எல்லை தாண்டி அங்கு ஷாப்பிங் செல்வது வழக்கம்.
ஆனால், எல்லை தாண்டி பிரான்ஸ் நாட்டுக்கு ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு ஒரு ஏமாற்றமளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
பெரிய வித்தியாசம் இல்லை
அதாவது, பிரான்ஸ் நாட்டில் சில பொருட்கள் விலை குறைவாக இருப்பதால் சுவிஸ் நாட்டவர்கள் எல்லை தாண்டி அங்கு சென்று அந்தப் பொருட்களை வாங்குகிறார்கள்.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 சதவிகித பணவீக்கத்தை சந்தித்தது பிரான்ஸ்.
ஆக, அந்த பணவீக்கம் காரணமாக தற்போது பிரான்சிலும் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.
அத்துடன், பிரான்சுடன் போட்டி போடுவதற்காக பல சுவிஸ் நிறுவனங்கள் பிரான்சில் விற்கப்படும் அதே விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றன.
ஆகவே, சுவிஸ் நாட்டவர்கள் எல்லை தாண்டி பிரான்சுக்குச் சென்று வாங்கும் பொருட்களின் விலை, கிட்டத்தட்ட அவர்கள் சுவிட்சர்லாந்தில் வாங்கும் அதே விலையில்தான் உள்ளது. பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.
என்றாலும், மாமிசம், மருந்துகள் மற்றும் புத்தகங்கள் விலை மட்டும் இன்னமும் சுவிட்சர்லாந்தைவிட பிரான்சில் விலை குறைவாகவே கிடைக்கின்றன என்பதுதான் ஒரே ஆறுதல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |