பூண்டு 4 துண்டுகள்.. சில துளி தேன்.. தினமும் காலையில் இப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
எந்த ஒரு உணவாக இருந்தாலும் நாம் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது அது நமது உடலுக்கு கேடு விளைவிக்கிறது. அந்த வகையில் பூண்டு நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான ஒன்று. பூண்டில் ஆஸ்பிரின் குணம் உள்ளதால் நமக்கு ஏற்படும் இதயக்கோளாறை தவிர்க்க முடியும்.
பூண்டை சாப்பிடுவதால் நமது உடலில் உண்டாகும் கொழுப்பை கரைக்க முடியும். உணவுகளில் சுவை மற்றும் நறுமணத்தை கொடுப்பதை தவிர பூண்டில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றது. பூண்டில் உள்ள மருத்துவ நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..
பூண்டு பற்களை 3-4 துண்டுகளாக நறுக்கி ஒரு கரண்டியில் வைக்கவும். கரண்டியில் சில துளிகள் தேனை ஊற்றி இரண்டு நிமிடம் அப்படியே வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து பூண்டை சரியாக மென்று விழுங்குங்கள். பூண்டின் சுவை உங்களுக்கு சற்று அதிகமாகத் தோன்றினால் அதனுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம்.
5 டேபிள் ஸ்பூன் தேனில் 4 பற்கள் நறுக்கிய பூண்டு சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.இந்த கலவையில் இருந்து தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து தினமும் சாப்பிடுங்கள். இந்த கலவையை காற்றுப் புகாத பாட்டிலில் சேமித்து வைக்க வேண்டும்.
பூண்டை பச்சையாக சாப்பிடுவது அமிலத்தன்மையை ஏற்படுத்தும் ஆனால் பூண்டுடன் தேனை சேர்ப்பது அத்தகைய தீங்கு ஏற்படாது.தேன் மற்றும் பூண்டு வயிற்று நோய்த்தொற்றுகளை நீக்க உதவுகிறது.
பூண்டு உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தேன் இதய நோயாளிகளுக்கு ஒரு வகையான கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இது நோய் தொற்றுகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஜலதோஷம் மற்றும் இருமலையும் குணப்படுத்துகிறது.