இயற்கை முறையில் ஒரே வாரத்தில் முகம் வெள்ளையாக மாற இந்த ஒரு பொருள் போதும்
இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் இந்த ஒரு pack போதும்.
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், கருப்பான முகத்தை சிகப்பாக மாற்ற நம் வீட்டில் இருக்கும் நெய் ஒன்று போதும்.
சருமத்திற்கு நெய்
நெய்யில் உள்ள வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தில் சுருக்கங்களை குறைத்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.
தினமும் குளித்த பிறகு சருமத்தில் சிறிது நெய் தடவுவது, சருமத்தை ஈரப்பதமாக்கி வறட்சியைத் தடுக்க உதவும்.
சருமத்திற்கு நெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வர கரும்புள்ளிகள் இல்லாத மற்றும் இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது.
நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் தோல் அழற்சி மற்றும் தடிப்புகளையும் குறைக்கிறது. மேலும், சருமத்தை சுத்தம் செய்கிறது.
தினமும் நெய் கொண்டு உதடுகளை மசாஜ் செய்வதால் பிக்மென்டேஷனைத் தவிர்க்கிறது. மேலும், இயற்கையான இளஞ்சிவப்பு உதடுகளை அளிக்கிறது.
நெய்யை கண்களை சுற்றி தடவுவதால் கருவளையங்களை நீக்குகிறது. மேலும், கண்களை பிரகாசமாக்குகிறது.
தினமும் 2 ஸ்பூன் நெய்யை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதன்மூலம், இயற்கையாகவே சருமத்தை சுத்தப்படுத்துகிறது.
சருமத்தை சிகப்பாக்க உதவும் நெய்
நெய் மற்றும் மஞ்சளை சம அளவில் கலந்து பேஸ்ட் தயாரித்து முகத்தில் மென்மையாக தடவி உலர வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். பின்னர் உலர்ந்த துணியால் துடைக்கவும்.
மஞ்சள் மற்றும் நெய் இரண்டிலுமே சருமத்தை வெண்மையாக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.
இதனை தொடர்ந்து பின்பற்றினால், தெளிவான மற்றும் வெள்ளை சருமத்தைப் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |