இந்த ஒரே ஒரு மா போதும்.., இயற்கை முறையில் முகத்தை பொலிவாக்கலாம்
சூரிய கதிர்கள், உணவு மாற்றம் போன்றவற்றால் முகம் பொலிவிழந்து கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுகின்றன.
பொதுவாக அனைவரும் முகத்தை வெள்ளையாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
அந்தவகையில், வீட்டிலேயே இயற்கையாகவே பொலிவான முகத்தை பெற கடலை மா ஒன்று போதும்.
முகத்திற்கு கடலை மா
கடலை மா சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.
மேலும், சருமத்தை சுத்தப்படுத்துகிறது, வறட்சியைத் தடுக்கிறது மற்றும் எண்ணெய்த் தன்மையை நீக்குகிறது.
வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவை பாலில் கலந்து தடவினால் முகம் மென்மையாக இருக்கும்.
கடலை மா மற்றும் உளுந்து மாவை தோலில் தடவினால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி சருமத்தை மென்மையாக்குகிறது.
கடலை மாவை இயற்கையான ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தி இறந்த சரும செல்களை அகற்றலாம்.
வயதாகும்போது சுருக்கங்களும், நேர்த்தியான கோடுகளையும் குறைக்க கடலை மாவை சருமத்தில் தடவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |