சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் க்ரீன் டீ! எப்படி பயன்படுத்தணும்?
Skin Care
Green Tea
Honey
By Kirthiga
வீங்கிய கண்கள் மற்றும் கருவளையங்களுடன் போராடுகிறீர்களா?
உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டுமா?
க்ரீன் டீ ஷீட் மாஸ்க் போடுங்க!
கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பல்வேறு வழிகளில் தோல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இது பல அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் ஒரு சில பொருட்களில் ஒன்றாகும்.
இதை பயன்படுத்துவதால் முகத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஆகவே அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
- கிரீன் டீ தேயிலையுடன் சீனி மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவடைந்துக் காணப்படும்.
-
கிரின் டீ கலவையை எடுத்து அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, கட்டியாகியதும் முகத்தில் பூசி வரவேண்டும். இதை தினமும் செய்தால் நல்லது.
- கடலை மா, கிரீன் டீ மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசி, காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். முகப்பருக்கள் வருவதை தடுக்க உதவும்.
-
கிரீன் டீ பையை தண்ணீரில் ஊற வைத்து எடுத்த பின் கண்களின் கீழ் வைத்து வந்தால், கண்களுக்கு கீழ் பகுதியில் உள்ள கருவளையங்கள் நீங்கும். மேலும் கிரீன் டீ பவுடருடன் தேன் சேர்த்து பூச வேண்டும்.
- சூடான தண்ணீரில் கிரீன் டீ தேயிலையை ஊற வைத்து பின் ஆவி பிடித்தால் முகத்திற்கு நல்லது. மேலும் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US